திறக்கபடுமா கோயம்பேடு சந்தை...? துணை முதல்வர் நேரில் ஆய்வு

44 Views
Editor: 0

கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்..

திறக்கபடுமா கோயம்பேடு சந்தை...? துணை முதல்வர் நேரில் ஆய்வு:

 

கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆசியாவிலே பெரிய காய்கறி அங்காடி, கோயம்பேடு காய்கறி மற்றும் பழ, உணவு தாணிய அங்காடியாக உள்ளது. காய்கறி ஏற்றி வந்தவர்கள் வியாபாரிகள் என கோயம்பேடு அங்காடியில் இருந்தவர்கள் மூலமாக 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவியது.

இதனை தொடர்ந்து அங்காடி மூன்றாக பிரிக்கப்பட்டு காய்கறி அங்காடி சென்னையின் புறநகர் பகுதியான திருமழிசைக்கும், பூ அங்காடி மாதவத்திற்கும் மாற்றப்பட்டது. ஆனால் விற்பனையாளர்களுக்கு தற்காலிக அங்காடி விற்பனையில் பல சிரமங்கள் இருப்பதாகவும் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் கோயம்பேடு சந்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதை தொடர்ந்து இன்று தமிழக துணை முதல்வர் கோயம்பேடு சந்தையை ஆய்வு மேற்கொண்டார். மேலும் இன்று சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மற்றும் துணைமுதல்வருடன் கோயம்பேடு சந்தையை திறப்பது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் சந்தையை எப்போது திறப்பது என்று முடிவு தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநிலச்செய்திகள்