கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம்- சுப்ரீம் கோர்ட்

45 Views
Editor: 0

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது..

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம்- சுப்ரீம் கோர்ட்:

புதுடெல்லி:

இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்,

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று தெரிவித்து, பல்கலைக்கழக மானியக்குழு அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

மாநிலச்செய்திகள்