புதுச்சேரியில் செப்டம்பர் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு...

47 Views
Editor: 0

புதுச்சேரியில் செப்டம்பர் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு: 4 ஆம் கட்ட தளர்வுகளை குறித்து நாளை அறிவிக்கிறார் புதுச்சேரி முதல்வர்....

புதுச்சேரியில் செப்டம்பர் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு: 4 ஆம் கட்ட தளர்வுகளை குறித்து நாளை அறிவிக்கிறார் புதுச்சேரி முதல்வர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் நாராணயசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நகரம் மற்றும் புறநகரில் ஒரு வார காலத்துக்கான ஊரடங்கு மறுபரிசீலனை செய்யப்படும் என கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு என மத்திய அரசு அறிவித்த நிலையில் புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு குறித்து நாளை முடிவு செய்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தேவனை அளிக்கிறது என கூறினார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அரசு எடுக்கும் முடிவுகள் தோல்வி அடைகிறது என கூறினார். பல்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆயர்வேத, சித்தா சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தகவல் தெரிவித்தார். வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை குறித்து நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பொமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறினார். புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என கூறினார்.

மாநிலச்செய்திகள்