ஆன்லைன் வகுப்புக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி:
சென்னை: ஆன்லைன் வகுப்புக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மேலும் ஆன்லைன் கல்வியின் போது ஆபாச இணையத்தளங்கள் நுழையாமல் தடுக்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கு ஆன்லைன் கல்வி விதிமுறைகளை அமல்படுத்த மெட்ரிக் பள்ளி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.