தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்கு பிறகு தேர்வு

8 Views
Editor: 0

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15-ந் தேதி பிறகு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது..

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்கு பிறகு தேர்வு:

 

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15-ந் தேதி பிறகு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பின் நடத்தப்படும்.

தேர்வுக்கான கால அட்டவணை தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வருகை புரிந்து தேர்வுகளை எழுத கூடிய வகையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் எனவே மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறும் அமைச்சர் தன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இளநிலை பி.ஆர்.க் படிப்புகளுகான விண்ணப்ப பதிவு www.tneaonline.org என்கிற இணையதள பக்கத்தில் வருகின்ற ஏழாம் தேதி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மாநிலச்செய்திகள்