யுஜிசி நடைமுறைகளை பின்பற்றியே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி!! விளக்கினார் முதல்வர்!!
யுஜிசியில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றியே தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாக
முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொறியியல் இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு அரியர் இருந்தாலும் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களும் பாஸ் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள்
துணை வேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இச்சூழலில் பொறியியல் படிப்பில் அரியர் வைத்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதற்கு "பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் விதிமுறைகளை பின்பற்றியே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக" தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் அணில் சஹாஸ்ர புதே, தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் "அரியர் தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.ஆனால், மீண்டும் அரியர் தேர்வை நடத்த தயார் என்று தமிழக அரசு கூறவில்லை என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுத்திருந்தார்.
மேலும் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யுஜிசியில் உள்ள விதிகளை பின்பற்றியே தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் சிலர் திட்டமிட்டே வதந்தி பரப்பி வருவதாகவும் குற்றம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அரியர் தேர்ச்சி விஷயத்தில் முதலமைச்சரின் அறிவிப்பு அவசரமானதாக இருக்கிறது என்பதையே தற்போதைய தகவல்கள் வெளிக்காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் மாணவர்களின் வேலைவாய்ப்புக்குரிய தேர்ச்சியை வழிவகுக்க வேண்டும் என்று ஸ்டாலின், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.