வாணியம்பாடி அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆவரங்குப்பம் வரை பாலாற்றில் லேசான மழை நீர் வெள்ளம். ஆபத்தை உணராமல் மழை நீர் வெள்ளத்தில் மாணவர்கள் பயணம்.
வாணியம்பாடி, அக்.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மன்னாற்றில் வெள்ளம் ஏற்பாடு வெள்ள நீரானது திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை, ஆவரங்குப்பம் வரை பாலாற்றில் லேசான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆபத்தை உணராமல் வடக்குப்பட்டு பகுதியில் இருந்து ராமநாயக்கன்பேட்டை பகுதியில் செயல்படு வரும் பள்ளிக்கு மாணவர்கள் ஆற்று வெள்ளத்தை கடந்து செல்லுகின்றனர்.
பாலாற்றில் பெரிய அளவு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களை தூர் வரவேண்டும், நீர் சேமிக்கும் வகையில் பாலாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீர் சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.