வாணியம்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
வாணியம்பாடி, ஆக்.30- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வழிகாட்டுதலின் பேரில் நகர காவல் ஆய்வாளர் (பொறுப்பு)அன்பரசி தலைமையிலான போலீசார் பெருமாள் பேட்டை கூட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாத்(25) என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என கண்டறியப்பட்டு அவனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கே தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவன் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும்,
கடந்த 21-ம் தேதி வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக
தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவனிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து, அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.