ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டமாகும். முன்னாள் படை வீரர்களுக்கான ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு.
வாணியம்பாடி,நவ.2- வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்று சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் மையத்தில் ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் முன்னாள் படைவீரர்களுக்கு அறிமுகம் செய்யும் விழாவானது சென்னை பாதுகாப்பு கணக்குத்துறை துணை கட்டுபாட்டாளர் திலீப் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கலந்துகொண்டு ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களும் டிஜிட்டல் லைப் சான்றிதழ்களை வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதியம் பெறும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என சான்று பெற வேண்டியதற்காக அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது ஜீவன் பிரமான் திட்டம் மூலம் ஆப் மூலம் தங்களது செல்போனிலேயே அல்லது கணினி இணையதளம் மூலமாக உயிருடன் இருப்பதை பதிவு செய்து அதற்கான சான்று டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் பெற்றுகொள்ள முடியும். இது முன்னாள் படைவீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில்:- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட மாவட்டமாகும் இங்கு தான் அதிக அளவில் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களும் இருக்கின்றனர். எனவே இந்த திட்டமானது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அவர் எளிதில் டிஜிட்டல் லைப் சான்றை பெற முடியும். இதன் மூலம் எந்த சிக்கலுமின்றி அவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறலாம் என பேசினார். விழாவில் முன்னாள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.