வாணியம்பாடி இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தின் வெளியே இருந்த 2500 ரொக்க பணத்தை பத்திரமாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவி

37 Views
Editor: 0

வாணியம்பாடி இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தின் வெளியே இருந்த 2500 ரொக்க பணத்தை பத்திரமாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவிக்கு காவல் ஆய்வாளர் பாராட்டி பரிசு வழங்கினார்..

வாணியம்பாடி இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தின் வெளியே இருந்த 2500 ரொக்க பணத்தை பத்திரமாக கொண்டு சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவிக்கு காவல் ஆய்வாளர் பாராட்டி பரிசு வழங்கினார்.

வாணியம்பாடி,நவ.3- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் வசித்து வரும் சுவரந்தி(19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து வருகிறார்.

இவர் இன்று மதியம் வாணியம்பாடி கச்சேரி சாலை, சிவாஜி திரையரங்கம் முன்பாக உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற போது ஏற்கனவே 2500 ரூபாய் இயந்திரத்தின் வெளியே இருந்தை பார்த்து,யாரோ தவறி விட்டு சென்று இருப்பதை அறிந்து

அதனை பத்திரமாக கொண்டு சென்று நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பணத்தை ஒப்படைத்த மாணவி சுவரந்தியை நகர காவல் ஆய்வாளர்

அன்பரசி(பொறுப்பு)பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.

மாணவியின் நேர்மையை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மாநிலச்செய்திகள்