திருக்குறளை கிராம தோறும் பரப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.

54 Views
Editor: 0

வாணியம்பாடியில் நடந்த திருக்குறள் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பேசினார்..

திருக்குறளை கிராம தோறும் பரப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.

வாணியம்பாடியில் நடந்த திருக்குறள் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் பேசினார்.

வாணியம்பாடி,நவ.3- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திருக்குறள் மன்றம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் படித்துறை புத்தக அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா மற்றும் நூல்கள் அறிமுக விழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு திருக்குறள் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். கௌரவ தலைவர் நா.பிரகாசம், பொருளாளர் மு.யுவராஜன், துணைத்தலைவர் இரா.மோகன்,துணை செயலாளர் ஜே.சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.படித்துறை புத்தக அறக்கட்டளை தலைவர் ப.இளம்பரிதி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் கலந்து கொண்டு 2023ம் ஆண்டின் படித்துறை இலக்கிய விருது வழங்கி, நூல்களை வெளியிட்டு, வாணியம்பாடி திருக்குறள் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக மறையான திருக்குறளை ஒவ்வொருவரும் பட்டி தொட்டி எல்லாம் பரப்பவும், கிராமங்கள் தோறும் திருக்குறளை எடுத்து விளக்கிக் கூறிடவும், தமிழை வளர்த்திட பாடுபட வேண்டும் என்று பேசின

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.முரளி குமார், கள்ளக்குறிச்சி ஆர்.கே.சண்முகம் கல்விக்குழுமம் மருத்துவர் க.மகுடமுடி, அமிர்தாலயா கல்வி குழும செயலாளர் மாதவ பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து படித்துறை இலக்கிய விருதை முனைவர்.பாரதி கிருஷ்ணகுமாருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கினார், தொடர்ந்து அவர் ஏற்புரை வழங்கினார்.

விழாவில் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், நகர திமுக செயலாளர் வி.எஸ். சாரதி குமார், தொழிலதிபர் ஆர்.ஆர்.வாசு,டாக்டர் பசுபதி, இசுலாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரேணு, ஆங்கில பேராசிரியை ஏ.சோபனா,

மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் கி.பார்த்திபராஜா நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். முடிவில் திருக்குறள் மன்றம் செயலாளர் ஆ.முருகன் நன்றி கூறினார்.

மாநிலச்செய்திகள்