திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது, 8 கிலோ கஞ்சா பறிமுதல். தனிப்படை போலீசார் நடவடிக்கை.
வாணியம்பாடி,நவ.5- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படையினர் சோதனை மேற்கொண்டதில் திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் அண்ணா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த குமரவேல் (வயது 38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்
திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது, 8 கிலோ கஞ்சா பறிமுதல். தனிப்படை போலீசார் நடவடிக்கை.
பதிவு: நவம்பர் 5, 2024 11:10 45 Viewsவாணியம்பாடி,நவ.5- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளர்கள்.