ஆம்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது. அவர்களிடமிருந்து ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பணம் பறிமுதல்.
வாணியம்பாடி,நவ.5- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் , வன்னியநாதபுரம் கானாற்று பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக உமராபாத் போலீஸாருக்கு ரகசிய கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உமராபாத் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வன்னியநாதபுரம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கானாற்று பகுதியில் 10 க்கும் பேர் கொண்ட கும்பல் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டு பிடித்தனர்.
அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்(36) வினோத்(29) குட்டகந்தூர் பகுதியைச் சேர்ந்த தசரதன்(35) முரளி (28) சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்த மது(27) ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் வருவதை அறிந்து சிலர் அங்கிருந்து தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.