வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களின் கருத்தரங்கம்.

43 Views
Editor: 0

வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களின் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களின் கருத்தரங்கம்.

வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களின் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் எம்.செந்தில் குமார் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குனர் ஷபானா பேகம் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக முதல்வர் சத்திய கலா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் யுகேஜி பயிலும் அனைத்து மாணவர்கள் கலந்து கொண்டு, பாடவாரியாக தங்கள் திறைமைகளை வெளிப்படுத்தி சிறப்புடன் உரையாற்றினர். இக்கருத்தரங்கில் தொடக்கம் முதல் இறுதி வரை மாணவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.

மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் பள்ளி நிர்வாகம் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.

இறுதியில் கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் செந்தில்குமார் சான்றிழைகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜிரா இராம், ரேஷ்மா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஹாஜிரா இராம் நன்றி கூறினார்.

மாநிலச்செய்திகள்