வாணியம்பாடி கோனாமேடு நகராட்சி பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் கழிவறை கட்டிடடம் கட்ட பூமிபூஜை.
வாணியம்பாடி, நவ.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான புதிய கழிப்பறை கட்டடம் ரூ.22.50 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இதில் நகர திமுக செயலாளரும், வார்டு உறுப்பினருமான வி.எஸ்.சாரதிகுமார், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கட்டட பணியை தொடக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பி.முஹம்மத் அனீஸ், பிரகாஷ், பானுபிரிய வெங்கடேசன் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகி ரவி ரெட்டி, நகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து வாணியம்பாடி பேருந்துநிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி கடைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.