ஆம்பூரில் காலனி தொழிற்சாலை தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் கைது.
வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாத்திமனை பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், சூப்பர் நேஷன் கட்சி நிறுவன தலைவருமான கலீல் ரஹ்மான். இவர் (கடந்த 2016 ஆம் ஆண்டு ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஷு சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுதோல்வியடைந்தவர்).
இவர் பெரியவரிகம் பகுதியில் நிப்ராஸ் என்ற பெயரில் காலனி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு, ரஹ்மானியா தெரு பகுதியை சேர்ந்த தப்ரேஸ் அஹமத் என்பவர் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி கலீல் ரஹ்மானிடம் ரூபாய்
85 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததுள்ளார்.
இது குறித்து கலீல் ரஹ்மான் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி சுரேஷ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த தப்ரேஸ் அஹமத் என்பவரை கைது செய்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் ரூபாய் 1 கோடி மோசடி வழக்கும், கோவை- குனியமுத்தூர் காவல் நிலைத்தில் ரூபாய் 52 லட்சம் மோசடி புகார் என 2 புகார்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.