வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு நாள் விழா.

65 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு நாள் விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது..

வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு நாள் விழா.

வாணியம்பாடி,நவ.17- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு நாள் விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தலைவர் கே.எம்.கிருஷ்ணன் தலைம வகித்தார். செயலாளர் முனைவர் டி.வெற்றிவேலன், பொருளாளர் கே.டி.கே. ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் கே.ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பா.ரவி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

இதில் சிறப்பு விருந்தினகளாக திருப்பத்தூர் மாவட்ட கபடி சங்க செயலாளர் மதன், ஏலகிரி மலை தொன்போஸ்கோ கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக்கொடி, ஒலிம்பிக் கொடி, பள்ளியின் இலச்சினை கொடி மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தும் வெண்புறாகளை விண்ணில் பறக்க விட்டு விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தனர்.

விழாவில் தலைமை விருந்தினராக பளு தூக்குதலில் அர்ஜுனா விருது பெற்ற சதீஷ்குமார் சிவலிங்கம் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

விழாவில் பள்ளி மாணவர்களின் தடகளப் போட்டி, கபடிப்போட்டி, எறிபந்து போட்டி, பிரமிடு சாகசங்கள், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர். மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சுபாஷ் சந்திரபோஸ் அணிக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

விழாவில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றனர்.

விழாவில் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளியின் துணை முதல்வர் வி.பவித்ரா நன்றியுரை கூறினார்.

மாநிலச்செய்திகள்