தமிழக வெற்றிக் கழகத்தின் வழிக்காட்டுதல் குழு அமைக்க திட்டம் என தகவல்.
அக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெறவுள்ளனர் எனவும் தகவல்.
இவர்கள் கட்சியின் சட்ட ரீதியான ஆலோசனை மற்றும் மாவட்ட அளவிலான வழக்கறிஞர்கள் அணியை கட்டமைக்கவும் உள்ளனர் என கூறப்படுகிறது.
சமீபத்தில் மாநாட்டிற்காக தற்காலிக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நிரந்தர வழக்கறிஞர் அணியை நியமிக்கின்றனர் என தகவல்.