வாணியம்பாடி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புக்களை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடக்கி வைத்தார்.
வாணியம்பாடி, நவ.23- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி, புல்லூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் புதியதாக ஸ்மார்ட் வகுப்புக்கள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர் டி. சாம்ராஜ், பொருளாளர் எல்லப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் செலவில் புதியதாக ஸ்பார்ட் வகுப்புக்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சிக்கனாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், மல்ல குண்டா சேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.