வாணியம்பாடி அருகே கிராம ஊராட்சியில் நோயாளிகளுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தும், வீடுவீடாக சென்றும் கள ஆய்வு மேற்க்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
வாணியம்பாடி,nav.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தி்ன் கீழ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்க்கொண்டார்,
அப்போது நரசிங்கபுரம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும், வகுப்பறைகளையும், மாணவர்களின் கற்றல்திறனை ஆய்வு செய்தார்.
பின்னர் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இருப்புகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், ஆய்வு மேற்க்கொண்டார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு விடுத்து மருத்துவ சிகிச்சை முறைகளையும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து கிராம பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து இரவு அங்கேயே தங்கி கள ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் அதிகளவில் மாடுகளை வளர்ப்பதற்கான லோன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு சாலை வசதிகளை செய்து தர வேண்டுகோள் வைத்தனர்.
இந்த கள ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, அறந்தாங்காயம் முன்னேற்ற தலைவர் சங்கீதா பாரி, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சி வெங்கடேசன், துணைத்தலைவர் பி. திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.