ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.
வாணியம்பாடி, நவ.24- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஞானசுந்தரம் அறிவுரையின்படி ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்பாட்டை தடுக்கும் வகையில் அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் கலையரசி(பொறுப்பு) தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபாரதம் விதித்தனர்.
தொடர்ந்து புகையிலை, பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் கலையரசி எச்சரிக்கை விடுத்தார்.