திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் வீரராகவவலசை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக ஜலகண்டேஸ்வரர் மற்றும் முருகன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு விற்பனை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி விற்பனை பணம் 3 லட்சம் மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். விற்பனையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.