வாணியம்பாடியில் அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் இருவர் கைது. நகர போலீசார் நடவடிக்கை.

52 Views
Editor: 0

வாணியம்பாடி ஆக 04 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா நோய் தடுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாணியம்பாடியில் அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் இருவர் கைது. நகர போலீசார் நடவடிக்கை.

வாணியம்பாடி ஆக 04 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா நோய் தடுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை பயண்படுத்தி மணல் கொள்ளையர்கள் இரவு பகலாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆற்று பகுதிகளிலிருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை குறித்து சமுக ஆர்வலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் உத்தரவின் பேரில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெருமாள்பேட்டை பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட வளையம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தன்(26), மகேந்திரன்(29) ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Image may contain: sky and outdoor

மாநிலச்செய்திகள்