சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப்பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,717 பேர் சிகிச்சை!
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,11,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 97,574 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,350 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,130 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் 58.65% ஆண்களும் 41.35% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(11.08.2020) மட்டும், 11,028 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (ஆகஸ்ட்12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்:-
1 திருவொற்றியூர் 3,519
2 மணலி 1,700
3 மாதவரம் 3,298
4 தண்டையார்பேட்டை 9,268
5 ராயபுரம் 10,971
6 திருவிக நகர் 7,827
7 அம்பத்தூர் 5,460
8 அண்ணா நகர் 11,232
9 தேனாம்பேட்டை 10,533
10 கோடம்பாக்கம் 11,294
11 வளசரவாக்கம் 5,506
12 ஆலந்தூர் 3,168
13 அடையாறு 7,053
14 பெருங்குடி 2,877
15 சோழிங்கநல்லூர் 2,356
16 இதர மாவட்டம் 1,512.
மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை:-
1 திருவொற்றியூர் 342
2 மணலி 117
3 மாதவரம் 432
4 தண்டையார்பேட்டை 636
5 ராயபுரம் 752
6 திருவிக நகர் 718
7 அம்பத்தூர் 1,717
8 அண்ணா நகர் 1,174
9 தேனாம்பேட்டை 684
10 கோடம்பாக்கம் 1,353
11 வளசரவாக்கம் 817
12 ஆலந்தூர் 550
13 அடையாறு 950
14 பெருங்குடி 440
15 சோழிங்கநல்லூர் 442
16 இதர மாவட்டம் 6 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.