சென்னையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை:

107 Views
Editor: 0

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டிய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்..

சென்னையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை:

 

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டிய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னை:

அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் ஆய்வாளர் நடராஜன் சுட்டுக்கொன்றார்.

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

மாநிலச்செய்திகள்