வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்.

104 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..

வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்.

வாணியம்பாடி,நவ.11- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் மருத்துவர் அக்பர் கெளசர் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் ஹகீம் ஆயுஷா நாஜ் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் இயக்குநர் முனைவர் கோ.வெற்றிவேந்தன்(கோ. விஜயராகவன்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்:-

ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், போல ஏன் தமிழில் யுனானி மருத்துவம் இருக்கக் கூடாது என்று கல்லூரி தாளாளர் அக்பர் கௌசரிடம் வேண்டுகோள் விடுத்தேன். என் வேண்டுகளை ஏற்றுக் கொண்டு யுனானி மருத்துவ பட்டயப் படிப்பில் தமிழ் மட்டுமே கற்பிக்கப்படும் என்று மாணவர்களாகிய உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது மருத்துவத்தை முழுமையாக உணர்ந்து கற்றுக்கொள்ள வேண்டு மானால் உருது மொழியில் உள்ள மூலமான யுனானியை தெரிந்து கொள்வதற்கு உருது மொழியையும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் அப்போது தான் அதை ஆங்கிலத்திலோ தமிழிலோ நாம் உணரும் போது முழுமையான கருத்து தெளிவு ஏற்படும். எனவே தெய்வீக மருத்துவமான நபிகள் அவர்களால் உலகத்திற்கு கட்டமைக்கப்பட்டு தரப்பட்ட யுனானி மருத்துவத்தை முழுமையாக உணர்ந்து கற்க வேண்டும் அதற்கு உருதுமொழியில் தெளிவு பெற வேண்டும், மாணவர்கள் மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை (sorkurai.tn.gov.in) என்ற இணையதளத்தில் கலைச் சொற்கள் 15 லட்சத்து 33 ஆயிரத்து 699 சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மருத்துவக் கலைச் சொற்களும் உள்ளன. ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் உள்ள மருத்துவ கலைச் சொற்களும் தமிழில் செய்யப்பட்டுள்ளது. அச்சொற்களையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

இப் பன்னாட்டுக் கருத்தரங்கில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பயிற்றுநர்கள் பேராசிரியர் கெரின் குளக், (தூண்டல் இயன்மை மருத்துவர்) கிம் டோட்டி எச்மேனன், (மிகு ஆற்றல் வழங்கல் மருத்துவர்) மற்றும் திருவலாங்காடு ஒன்றிய பெருந்தலைவர் ஜீவா விஜயராகவன், வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவராஜ், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தொகுப்பாளர் வே.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலச்செய்திகள்