வாணியம்பாடி ஆதர்ஷ், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
வாணியம்பாடி,நவ.20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்ட
அளவிலான எரிபந்து, சதுரங்கம், இறகுப்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான
போட்டிகளுக்கு தகுதி
பெற்றனர்.
மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டிகளில் அனைத்து பள்ளி
மாணவர்கள் பங்கேற்ற விளையாடினர். இதில் ஆதர்ஷ்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் எரிபந்து, இறகுப்பந்து ,டேபிள் டென்னிஸ் மற்றும் சதுரங்கப் போட்டிகளில்
முதல் இடம்பிடித்து சாதனை படைத்தனர்.
மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி
தாளாளர் எம்.செந்தில்குமார்,
பள்ளி நிர்வாக இயக்குனர் ஷபானா
பேகம், பள்ளி நிர்வாக முதல்வர் சத்தியகலா, உடற்கல்வி ஆசிரியர் ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.


            Editor: 0
            
            
            









