வாணியம்பாடி பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு குற்ற செயல்களுக்கு எதிரான தடுப்பு குறித்து விழிப்புணர்வு.
வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், இணையவழி மோசடி குறித்தும், காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் வாணியம்பாடி பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.