வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிவறைகள் கட்ட பூமி பூஜை.

58 Views
Editor: 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிகுட்பட்ட 36 வார்டு நேதாஜி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது..

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிவறைகள் கட்ட பூமி பூஜை.

வாணியம்பாடி,நவ.26- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிகுட்பட்ட 36 வார்டு நேதாஜி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைத்தார்.

இதில் நகராட்சி பொறியாளர் கே.ராஜேந்திரன், நகர திமுக நிர்வாகிகள் எம்.குபேந்திரன், ஜெ.ரவி ரெட்டி, கழக வார்டு செயலாளர் விஜி, ஒப்பந்ததாரர் பி.ஜெகன் பிரசாத், ஜெனமே ஜெயன், நகராட்சி அதிகாரிகள், பள்ளி தலைமை வி.சாஜிதா பேகம், ஆசிரியர் இப்ரான் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மாநிலச்செய்திகள்