கண்ணம்பூச்சி விளையாடும் தங்கத்தின் விலை..! திக்குமுக்காடும் வாடிக்கையாளர்கள்..!
வாடிக்கையாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால் விலையில் நாள்தோறும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. இதனால், ரியல் எஸ்டேட், பங்கு சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வதை வாடிக்கையாளர்கள் குறைத்து வருகின்றனர்.
மேலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செலுத்துவதில் ஆர்வம் காண்பிக்க தொடங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.53 குறைந்து ரூ. 4,911-க்கு விற்பனையாகி வருகிறது.
ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.424 குறைந்து ரூ. 39,288 க்கும் வர்த்தகமாகிறது. இதேபோல, சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 1800 குறைந்து ரூ.74,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.