வங்கிக் கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்றால் என்ன நடக்கும்?

33 Views
Editor: 0

வங்கியின் லாபம். கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கும் போது, இந்த லாபம் குறையும். இது பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு வழங்கும் வட்டியில் எதிரொலிக்கும்..

வங்கிக் கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்றால் என்ன நடக்கும்?

 

வங்கியின் லாபம். கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கும் போது, இந்த லாபம் குறையும். இது பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு வழங்கும் வட்டியில் எதிரொலிக்கும்.

கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

கொரோனா காலத்தில் செலுத்தப்படாத கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் நிலையில் தற்போது வரை சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஒரு வேளை, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாமல் போனால், வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

பொதுவாக, செலுத்தப்படாத கடன் தவணை மீது, வட்டிக்கு வட்டி வசூலிப்பது தான் வங்கிகளின் நடைமுறையாக இருக்கிறது. ஒருவேளை, இந்த நடைமுறை இல்லாமல் போனால், கொரோனா காலத்தில் மாத தவணை செலுத்த பணம் இருந்தும், மாத தவணை செலுத்தாமல், அந்த பணத்தை வேறு விதங்களில் முதலீடு செய்து சிலர் லாபம் பார்க்க கூடும்.

இதன் மூலம் தனிப்பட்ட நபருக்கு லாபமாக இருந்தாலும், வங்கிகளுக்கு வர வேண்டிய வட்டி தொகையில் நஷ்டம் ஏற்படும். இந்த நஷ்டம் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் மீது வட்டி குறைப்பாக வந்து முடியும்.

ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் மாத தவணை செலுத்தி வந்த நிலையில், கொரோனா காரணமாக, அவருக்கு கடன் தவணையை செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும்போது, 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய 10 ஆயிரம் ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும். அதாவது. இன்று 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் பொருளின் விலை, அடுத்த 2 ஆண்டுகளில் 12 ஆயிரமாக அதிகரித்திருக்கும். இதன் மூலம் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதை கணக்கில் கொண்டு தான் அபராதம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

வங்கி என்பது உற்பத்தி துறை சார்ந்த ஒரு நிறுவனம் அல்ல. டெபாசிட் வாங்கி, வட்டிக்கு கடன் கொடுப்பதன் மூலம் வரும் தொகை தான், வங்கியின் லாபம். கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கும் போது, இந்த லாபம் குறையும். இது பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு வழங்கும் வட்டியில் எதிரொலிக்கும்.தற்போது கடன் வாங்கியவர்கள் தரப்பில், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வட்டி இல்லாமல் கடனை செலுத்த அவகாசம் வழங்கினால், இதன் மூலம் வங்கிக்கு ஏற்படும் நஷ்டம், டெபாசிட் செய்தவர்கள் மீது சுமத்தப்படும். பின்னர், டெபாசிட் செய்தவர்கள், வட்டி குறைக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடரும் நிலை ஏற்படலாம்.



வங்கி கணக்கில் இருப்பது, வரி செலுத்திய பின்னர், ஒருவருடைய தனிப்பட்ட சேமிப்பு, அதற்கு வட்டி பெறுவது என்பது சாமானிய மக்களின் உரிமை. தேசிய பேரிடர் என்ற காரணத்தால், நிறுவனங்களுக்கு கடன் செலுத்த கால அவகாசம் வழங்கி, அதனால் ஏற்படும் இழப்பை டெபாசிட் செய்தவர்களுக்கு வழங்கும் வட்டியில் ஈடுகட்டுவது கூடாது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.