கைலாசா நாணயம் செல்லுமா? செல்லாதா? நித்யானந்தா சாதாரண ஆளு இல்லங்க! இந்தியாவிற்குள் கொண்டு வந்தால் வேற லெவல் நீங்க!

31 Views
Editor: 0

கைலாசா நாணயம் செல்லுமா? செல்லாதா? நித்யானந்தா சாதாரண ஆளு இல்லங்க! இந்தியாவிற்குள் கொண்டு வந்தால் வேற லெவல் நீங்க!.

கைலாசா நாணயம் செல்லுமா? செல்லாதா? நித்யானந்தா சாதாரண ஆளு இல்லங்க! இந்தியாவிற்குள் கொண்டு வந்தால் வேற லெவல் நீங்க!

 

உலகமே அடுத்து என்ன நடக்க போகுதோ? இந்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பாங்களா? மாட்டாங்களா? என்று புலம்பிக்கொண்டிருக்க, அங்கே ஒருவர் நாட்டையே உருவாக்கி, நாணயத்தை வெளியிடும் அளவுக்கு அடுத்து அடுத்துன்னு போயிட்டே இருக்காரு. ஒரு காலத்தில் சில ரூபாய் இந்திய நாணயத்திற்காக பிச்சை கேட்டு கோவில் வாசலில் நின்றவர், இன்றைக்கு சொந்தமாக நாணயம் வெளியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார் என்றால், வாழ்க்கை யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

nithyanada kailasa currency

சரி! இந்த தத்துவம் பேசறது எல்லாம் இருக்கட்டும். கைலாசா நாணயத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தால் செல்லுமா? செல்லாதா? அதை முதலில் பார்க்கலாம். தனி நாடு குறித்த அறிவிப்பு வெளியான போதே, பாஸ்போர்ட், தனியாக ரிசர்வ் வங்கி, கைலாசா நாட்டிற்கான கரன்ஸி என்று டெக்னிக்கலாக பேசி மக்கள் மனதுக்குள் ஒரு கியூரியாசிட்டியை உருவாக்கிவிட்டார் என்றே சொல்லலாம். சும்மா ஒன்றுக்கு இரண்டாக அச்சிடப்பட்டு, நானும் என் நாட்டிற்கு நாணயம் வெளியிட்டு விட்டேன் என்று நித்யானந்தா பிதற்றிக்கொள்ளவில்லை.

nithyanada kailasa currency

அவரின் கெட்டிக்காரத்தனத்தை நாணயம் உருவான விதத்தை வைத்தே அறிந்து கொள்ள முடியும். வெறுமனே காகிதத்தில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டால், அது மற்ற நாடுகளில் செல்லாது என்பது நித்யானந்தாவிற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஒரு பேச்சுக்கு சொல்றேன். தனி நாடு அறிவிப்பு கூட பொய் என்று வைத்துக்கொள்வோம். அந்நாட்டுக்கு தனியாக வங்கி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கூட பொய் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நித்தியானந்தா வெளியிட்டுள்ள நாணயத்தை உலகின் எந்த நாடுகளுக்கு கொண்டு சென்றாலும் செல்லுபடியாகும்.

nithyanada kailasa currency

தங்கத்தில் நாணயம் வெளியிட வேண்டுமென்று நித்யானந்தா எடுத்த முடிவு, எல்லா நாடுகளிலும் செல்லுபடியாக வேண்டும் என்பதை மையமாக வைத்தே எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 11.66 கிராம் எடை கொண்ட தங்கத்தை வைத்து ஒரு கைலாசா டாலர் அச்சிடப்படும் என்கிறார் நித்தியானந்தா. சரி. இந்த 11.66 கிராம் தங்கம் 22 கேரட் தரம் கொண்டது என ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். சென்னையில், இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 5,048 ரூபாய். ஆக கைலாசா நாட்டின் 11.66 கிராம் எடை கொண்ட ஒரு கைலாசா டாலரின் மதிப்பு 58,860 இந்திய ரூபாய். 

nithyanada kailasa currency

இப்படி எளிதாக தங்கத்தின் மதிப்பை வைத்து ஒவ்வொரு நாட்டு பணத்தின் மதிப்புக்கு ஏற்ப, கைலாசா நாணயத்தை மாற்றிக்கொள்ள முடியும். எந்த நாணயத்தில் எவ்வளவு தங்கம் நிறைந்துள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட்டு உள்ளதால், பிற்காலத்தில் மதிப்பீடு பிரச்சனையும் இருக்காது. விரைவில் பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிடப்போகிறாராம். போகிற போக்கை பார்த்தால், 90கிட்ஸ் முக்கால்வாசிப் பேர் கைலாசவாசியாக மாறக்கூடும் போல இருக்கே.