மெல்ல மெல்ல உயரும் தங்கம் விலை…! மீண்டும் ரூ.40,000த்தை நெருங்குகிறது..!
வாடிக்கையாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால் விலையில் நாள்தோறும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. இதனால், ரியல் எஸ்டேட், பங்கு சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வதை வாடிக்கையாளர்கள் குறைத்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செலுத்துவதில் ஆர்வம் காண்பிக்க தொடங்கினர். இதனால், தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.39,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.16 உயர்ந்து ரூ.4,925-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.900 அதிகரித்து ரூ.70,900 ஆக வர்த்தகமாகி வருகிறது.