கொரோனாவிற்கு மருந்து தாமதமானால் இந்தியாவின் ஜிடிபி 7.5% சரியும்..!

39 Views
Editor: 0

மும்பை: கொரோனா பரவலை தடுக்க மருந்து கண்டுபிடிக்க தாமதமானால் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 7.5 சதவீதம் குறையலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்..

மும்பை: கொரோனா பரவலை தடுக்க மருந்து கண்டுபிடிக்க தாமதமானால் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 7.5 சதவீதம் குறையலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் செய்தியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தாமதமானால், இந்தியாவின் ஜிடிபி விகிதமானது, 2021ம் நிதியாண்டில் 7.5 சதவீதம் வீழ்ச்சி காணும் என்றும் வெளிநாட்டு தரவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ளது.

அதோடு பாங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸின் பொருளாதார வல்லுனரும், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் தற்போது 4 சதவீதம் சுருங்கலாம் என்றும் கூறியுள்ளனர். உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்து வரும் அதே நேரத்தில், பொருளாதாரத்தினையும் பதம் பார்த்த்து வருகிறது. இந்த நிலையில் இந்த வைரஸினை குணப்படுத்த எப்படியேனும் ஏதாவது தடுப்பூசியை கண்டு பிடித்து விட மாட்டோமா? என்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளும், அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் இதுவரையில் நம்பிக்கை கொடுக்கும் விதமாக எந்தவொரு சரியான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் வளர்ந்து வரும் பொருளாதாராமான இந்தியாவின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதம் வீழ்ச்சி காணக்கூடும் என்றும் பல நிபுணர்கள், ஆய்வு அறிக்கைகள் கூறி வருகின்றன. இன்னும் சில அறிக்கைகள் நாடு தழுவிய லாக்டவுன் உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 7.2 சதவீதம் குறையும் என்றும் மதிப்பிட்டுள்ளன. எனினும் இதனையெல்லாம் தாண்டி தற்போது இந்த அறிக்கையானது, 7.5 சதவீதம் ஜிடிபி விகிதம் குறையும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக 5 சதவீதம் ஜிடிபி சரியும் என்று கூறிய நிபுணர்கள், ஒவ்வொரு மாதமும் லாக்டவுனால் 1 சதவீதம் வளர்ச்சியினை பாதிக்கிறது என்றும் கணித்துள்ளனர். இதனை சரி செய்யும் விதமாக நடப்பு நிதியாண்டில் இந்தியா வட்டி விகிதத்தினை 2 சதவீதம் குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். எனினும் நிதிபற்றாக்குறையானது ஜிடிபியில் 6.85 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும், இது பட்ஜெட்டில் 3.5 சதவீதமாகவும் இலக்கும் வைக்கப்பட்டது. இதுவே ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறையானது 10.7 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.



 



 

வணிகச் செய்திகள்