இதயம் வி.ஆர்.முத்து
ஒரு பிராண்டையோ பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும். அந்த வகையில் பல கோடிப் பேரின் 'இதயம்' கவர்ந்த இதயம் நல்லெண்ணெய் வளர்ந்த கதை சுவாரஸ்யமானது.
"1986-ம் ஆண்டு `இதயம் நல்லெண்ணெய்' என்ற புது பிராண்டை ஆரம்பித்தோம். எங்கள் கடின உழைப்பால் தமிழ்நாடு முழுக்க அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழ்நாட்டைப் போல் அண்டை மாநிலங்களிலும் இதயம் நல்லெண்ணெயை அறிமுகப்படுத்த நினைத்தேன். அதற்காக பெங்களூரிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு இரண்டு இதயம் நல்லெண்ணெய் பெட்டிகளை எடுத்துச்சென்று, ''எங்கள் எண்ணெயை வாங்குகிறீர்களா?'' என்று அந்தக் கடையின் உரிமையாளரிடம் கேட்டேன். அவர் என்னை, அவரின் தம்பியைப் பார்க்கச் சொன்னார். அவர் தம்பி, கடையின் மேலாளரைப் பார்க்கச் சொன்னார். அவர்கள் நடந்துகொண்டதிலிருந்து என்னை புறக்கணிக்கப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.
மேலாளரிடம் செல்வதற்கு முன்னர் என் முடிவை மாற்றிக்கொண்டேன். மேலாளரிடம், ''உங்கள் கடையில் 1,000 ரூபாய்க்குமேல் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளருக்கு எங்கள் இதயம் நல்லெண்ணெய் அரை கிலோ பாக்கெட்டை இலவசமாகத் தர விரும்புகிறேன்'' என்று கூறினேன்.
இதயம் நல்லெண்ணெய்
இதைக் கேட்டு உற்சாகமடைந்த மேலாளர், அவருடைய இரு முதலாளிகளிடமும் கூற, அதன் பிறகு அவர்கள் என்னை நடத்தியவிதம் வேறாக இருந்தது. `தடைகளைப் பார்த்து பயப்படக் கூடாது. தடைகளைத் தகர்க்க வேண்டும். தடைகளைப் படிக்கல்லாக மாற்ற யோசிக்க வேண்டும். சிறப்பான எண்ணங்கள் கஷ்ட காலத்தில்தான் தோன்றும்' என்பதை நான் உணர்ந்துகொண்ட நேரம் அது.
இரண்டு பெட்டி விற்கச் சென்ற நான் அன்று எடுத்த முடிவால் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றேன். இன்று வடமேற்கே டொரொன்டோ முதல் தென்கிழக்கே நியூசிலாந்து வரை பலரும் எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க 38 நாடுகளில் எங்கள் தயாரிப்பை விற்பனை செய்கிறோம்"
- ஒரு வியாபாரத்தைத் தொடங்கி மிகப்பெரிய அளவில் வளர்வது என்பது சாதாரணமான விஷயமல்ல. தன்முனைப்புடன் சில வெற்றிச் சூட்சுமங்களைக் கையாளும்போதுதான் ஒரு வியாபாரத்தையோ, ஒரு பிராண்டையோ பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும். அந்த வகையில் பல கோடிப் பேரின் 'இதயம்' கவர்ந்த இதயம் நல்லெண்ணெய் வளர்ந்த கதை சுவாரஸ்யமானது.
'தினந்தோறும் வாங்குவேன் இதயம்' - இது நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான விளம்பரம். நல்லெண்ணெய் சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னனாகத் திகழும் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவரும், ஆர்.ஜே மந்த்ரா பள்ளியின் புரவலருமான வி.ஆர்.முத்துவிடம் பேசினோம். அவர் தன்னுடைய வெற்றிக்கதையை நம்மிடம் `நச்'சென்று எடுத்துச் சொன்னார்.