சீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. பலத்த அடி கொடுத்த பிரிட்டன் அரசு.. பரபர பின்னணி என்ன?

41 Views
Editor: 0

சீனாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏனெனில் தற்போது சீனாவின் பிரபலமான ஹூவாய் நிறுவன தயாரிப்புகளுக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது..

சீனாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏனெனில் தற்போது சீனாவின் பிரபலமான ஹூவாய் நிறுவன தயாரிப்புகளுக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்திற்கு தடை விதித்திருந்த நிலையில், தற்போது பிரிட்டனும் தடை விதித்துள்ளது அந்த நிறுவனத்திற்கு பெரிய அடியாகத் தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தற்போது சீனா பிரிட்டன் இடையேயும் விரிசல் அதிகரித்து வர தொடங்கியுள்ளது.
பிரிட்டனின் அதிரடி அறிவிப்பு சுமார் 20 வருடங்களாக சீனாவின் ஹூவாய் பிரிட்டனில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வந்த நிலையில், தற்போது இப்படி ஒரு அதிரடியான முடிவினை பிரிட்டன் எடுத்துள்ளது. இது குறித்து தனது அறிவிப்பினை நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் துறை அமைச்சர் ஆலிவர் டவுடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவை கூட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.


தகவல் பரிமாற்றம்

தகவல் பரிமாற்றம்

ஏற்கனவே அமெரிக்கா ஹூவாய் நிறுவனம், அமெரிக்காவின் தொழில் நுட்பத் தகவல்களைத் எடுத்து சீனாவுக்கு அனுப்புவதாக குற்றம் சாட்டிய நிலையில் தான் அங்கு தடை செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது பிரிட்டனும் இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது. இது இந்த வருடம் டிசம்பர் இறுதி வரை தடை விதிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

முற்றிலும் தடை

முற்றிலும் தடை

மேலும் 2027ம் ஆண்டுக்குள் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தினை முற்றிலுமாக பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்படும் என்றும் இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ஹூவாய் தரப்பில், பிரிட்டனின் இந்த அதிரடியான முடிவானது ஏமாற்றமளிக்கும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இது மோசமான செய்தி

இது மோசமான செய்தி

மேலும் இங்கிலாந்தில் மொபைல் கொண்ட எவருக்கும் இது மோசமான செய்து என்றும் ஹூவாய் தெரிவித்துள்ளது. அதோடு பிரிட்டன் அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஹூவாய் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் சீனா பிரிட்டனை எச்சரித்தது. இந்த நிலையிலேயே இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா எச்சரிக்கை அமெரிக்கா தரப்பில் சீனாவின் இந்த தனியார் நிறுவனம் பெய்ஜிங்குக்காக உளவு பார்க்கலாம். இது போர்காலங்களில் இந்த 5ஜி நெட்வொர்க்குகளை மூடலாம் என்றும் எச்சரித்திருந்தது. ஆனால் இதனை மறுத்துள்ள ஹூவாய் நிறுவனம், தற்போதைய 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகளின் பாதுகாப்பினை சரிபார்க்கும் பிரிட்டன் பாதுகாப்பு நிறுவனங்களுடன், இரண்டு தசாப்த காலங்களாக சரியான ஒத்துழைப்பை காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

வணிகச் செய்திகள்