Infosys லாபம் மேலே மேலே.!!

37 Views
Editor: 0

நாட்டில் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது..

நாட்டில் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான (ஐடி) இன்போசிஸ் நிறுவனத்தில் முதக் காலாண்டு நிகர லாபம் ரூ.4,272 கோடி என தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் லாபம் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.3,802 கோடியாக இருந்து என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த காலாண்டில் ரூ.470 கோடி அதிக லாபம் பெற்றுள்ளது. இதே போல நிறுவனத்தின் வருவாய் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.23,665 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தின் போது நிறுவனத்தின் வருவாய் ரூ.21,803 கோடியாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் இந்நிறுவனத்தின் வருவாயில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

கொரோன பிரச்சனையால் ஊரடங்கு இருந்து போதிலும் கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் ஏற்பட்டிருந்த போதும் இன்போசிஸ் நிறுவனத்தில் வருவாய் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags: 

வணிகச் செய்திகள்