வேர்ல்ட் எகனாமிக் பாரம்’ன் தலைமை பொருளாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினர். கொரோனா தொற்றுநோய் 1870’ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய தனிநபர் வருமானத்தில் மிகப்பெரிய சுருக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான முன்னறிவிப்பு இருந்தபோதிலும், உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதாரத்தை வடிவமைக்க இப்போது ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, 2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 3.1%’ஆகக் குறைந்துள்ளது என்று புள்ளிவிவர அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தைப் பற்றி பேசும்போது, பொருளாதார வல்லுநர்கள், சேவைத் துறையும், விவசாயத் துறையும் தான் இந்த தொற்றுநோய்களின் போது கூட, அதன் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவியுள்ளன என தெரிவித்துள்ளனர்.
இந்தியா எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி பேசும்போது, புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய வங்கியின் (ஈபிஆர்டி) தலைமை பொருளாதார நிபுணர் பீட்டா ஜவோர்சிக், “இந்தியா அதன் வலுவான சேவைத் துறையை நம்பியே முன்னோக்கி செல்லும்.
தொற்றுநோய்களின் போது, பல நிறுவனங்கள் அவர்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை நம்பியுள்ள நிலையில் தற்போது அதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன” என்று தெரிவித்தார்.
“தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மென்பொருளில் கூடுதல் முதலீடு தேவை என்று நான் நினைக்கிறேன். எனக்கு மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், தொற்றுநோயின் ஆரம்பத்தில் சீனாவில் உற்பத்தியின் செறிவு பற்றி நாம் நிறைய பேசினோம், இது பல நிபுணர்களால் பாதிக்கப்படக்கூடிய ஆதாரமாக கருதப்பட்டது.
ஆனால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் அதிக அலுவலக சேவைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இது ஒரு தொற்றுநோயை இந்தியா எவ்வளவு சிறப்பாகக் கையாளுகிறது என்பதற்கு ஒரு சான்றாகும். இருப்பினும், சேவைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி இந்தியாவுக்கு கூடுதல் சேவைகளை ஏற்றுமதி செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.” என்று பீட்டா மேலும் கூறினார்.
எனினும், அலியான்ஸின் தலைமை பொருளாதார நிபுணர் லுடோவிக் சுப்ரான், இந்தியாவின் தற்போதைய நிலைமை தொற்றுநோயிலிருந்து மிகவும் மெதுவாக மீள்வதைக் குறிக்கிறது என்றும் அதே நேரத்தில் இந்த முன்னேற்றம் சிக்கல்களைக் கையாள்வதில் அடங்கியுள்ளது என தெரிவித்தார்.
இந்த தொற்றுநோய் எவ்வளவு மோசமான நிலையை எட்டும் என்பதைப் பற்றி பேசும்போது, சுப்ரான், “துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு தொற்றுநோயால் பொருளாதார தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் உள்ளது. மின்சாரம், பணியிட இயக்கம் இவை அனைத்தும் இந்தியா மிக மெதுவாக மீண்டு வருவதைக் குறிக்கிறது.
2020-21 நிதியாண்டில் -3.1 என்று கணிக்கப்பட்ட நிலையில் இந்திய பொருளாதாரம் 7 சதவிகிதம் அளவிற்கு மீண்டும் உயரும். ஆனால் 2022’க்கு முன்னர் இந்தியா நெருக்கடிக்கு முந்தைய காலத்திற்கு செல்லாது.
ரூபாய் தேய்மானத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பது கேள்வி. அது ஒரு பெரிய பிரச்சினை. ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கிறது. ஆனால் அது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்.” என கூறினார்.
“பிரேசில், இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே இந்தியாவுக்கும் இந்த 18 மாதங்கள் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் மேலும் கூறினார்.
யுபிஎஸ்ஸின் தலைமை பொருளாதார நிபுணர் பால் டோனோவன், விவசாயத் துறை இந்தியாவுக்கு பலனளித்திருந்தாலும், அதன் சொந்த கட்டமைப்பு அக்கறைகளைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
அவர் மேலும், “விவசாயம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. அதன் மிகப்பெரிய துறையான விவசாயம் நியாயமான அளவிலான வளர்ச்சியை தொடர்ந்து காணப்போகிறது. ஒருபுறம் சில கட்டமைப்பு பிரச்சினைகள் இருந்தாலும், விவசாயப் பக்கம் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட அடித்தளத்தை அளிக்கிறது.
இந்தியாவில் தொற்றுநோய்க்கு பிந்தைய வளர்ச்சியைப் பற்றி, கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்து உண்மையை குறிப்பிடுகிறார்கள். நாங்கள் அடுத்த சீனாவாக இருக்கப் போகிறோம் என இனி யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் அந்த மாடல் இனி இயங்காது. நாங்கள் வணிகத்தை வேறு வழியில் கொண்டு செல்கிறோம். அந்த உணர்தல் இந்தியாவில் உறுதியாக நிலைபெற்றுள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை.
பொருளாதாரத்தின் கட்டமைப்புகளை எவ்வாறு மாற்றியமைப்பது மற்றும் அதற்கான முன்னுரிமைகள் பற்றி அவர்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும். உலகின் நடுத்தர காலப்பகுதியில் பொருளாதாரம் அதிக உள்ளூர்மயமாக்கலுடன் உள்ளது. இந்த கட்டமைப்பு முறிவை இந்தியா முழுமையாக ஏற்றுக்கொண்டதா என்பது எனக்கு கவலை அளிக்கிறது.” எனக் கூறினார்.
வேர்ல்ட் எகனாமிக் பாரத்தில் பால் டோனோவன் (தலைமை பொருளாதார நிபுணர், யுபிஎஸ்), பீட்டா ஜவோர்சிக் (தலைமை பொருளாதார நிபுணர், புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய வங்கி), ஜியான்குவாங் ஷேன் (தலைமை பொருளாதார நிபுணர், ஜே.டி.காம்), லுடோவிக் சுப்ரான் (தலைமை பொருளாதார நிபுணர், அலையன்ஸ்) மற்றும் சாதியா ஜாஹிடி (வேர்ல்ட் எகனாமிக் பாரம்’ன் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டனர்.