இந்தியாவில் உளவுபார்க்கும் சீன நிறுவனங்கள் இவைதான்!

67 Views
Editor: 0

டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உட்பட 59 சீன ஆப்களுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது. .

 

டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உட்பட 59 சீன ஆப்களுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, பல்வேறு சீன நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்புகொண்டவை என மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இந்நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்துகொண்டே உளவு பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் சட்டம் என்ன சொல்கிறது?

samayam tamil

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீனா புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி, சந்தேகத்திற்குரிய நிறுவனங்களை கண்காணிக்கவும், அலுவலகங்களை சோதனையிடவும், வாகனங்களையும், கருவிகளையும் பறிமுதல் செய்யவும் சீன அரசு தனக்கு அதிகாரத்தை வழங்கிக்கொண்டது.

இதனால், ஹுவே, டிக்டாக், ஜிடிஇ உள்ளிட்ட சீன நிறுவனங்கள் சீன அரசின் உளவுப் பணிகளுக்கு ஒத்துழைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அந்நிறுவனங்களுக்கு சீன அரசு கெடுபிடி கொடுக்கும் என தெரிகிறது. இந்த சட்டம் சீனாவிலிருந்து வெளிநாடுகளில் முதலீடு செய்யக்கூடிய நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் பொருந்தும்.

ஷிண்டியா ஸ்டீல்ஸ்

samayam tamil

இந்தியா, சீனா இடையேயான கூட்டு முயற்சியில் கர்நாடக மாநில ஹொஸ்பெட்டில் ரூ.250 கோடி செலவில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த ஷிங்ஷிங் கேதி இண்டர்நேஷனல் குழுமம் ஏராளமாக முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம் சீன ராணுவத்துடன் தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது.

ஹுவே

samayam tamil

சீன ராணுவத்தின் பொறியியல் பிரிவின் முன்னாள் இணை இயக்குநரான ரென் ஷென்ஃபீ என்பவர்தான் 1987ஆம் ஆண்டில் ஹுவே நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் உலகளவில் பிரபலமான நிறுவனமாக தொழில் செய்து வருகிறது. 2018-19ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஹுவே ரூ.12,800 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

சிஇடிசி

samayam tamil

சிஇடிசி (சீன எலக்ட்ரானிஸ்க் டெக்னாலஜி குரூப் கார்ப்பரேஷன்) நிறுவனம் ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் 200 மெகாவாட் திறன் கொண்ட மின்சார ஆலை அமைக்கப்படும் என 2018ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.320 கோடியாகும். இந்நிறுவனம் ஹைக்விஷன் சிசிடிவி கேமராக்களையும் உற்பத்தி செய்து வருகிறது.

சட்டவிரோத இறக்குமதி விவகாரத்தில் அமெரிக்காவில் இந்நிறுவனம் மூன்று முறை சிக்கிக்கொண்டது. ராணுவ உளவு விவகாரத்தில் இந்நிறுவனத்தின் ஊழியர்களும் அமெரிக்காவில் பிடிபட்டனர். இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவில் ஷிஞ்சியாங் மாகாணத்தில் சீன அரசு உய்கர் முஸ்லிம்களை துன்புறுத்தி மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது.

ஷிங்ஷிங் கேதி இண்டர்நேஷனல் குழுமம்

samayam tamil

இந்நிறுவனம் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.1,000 கோடி செலவில் ஆலை அமைத்துள்ளது. இந்நிறுவனத்திற்கு சத்தீஸ்கர் மாநில அரசுதான் அழைப்பு விடுத்தது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி விற்றுமுதல் பெறும் இந்நிறுவனம் ஏற்கெனவே இந்தியா முழுவதும் 30,000 டன் இரும்பு பைப்புகளை விநியோகித்துள்ளது.

வணிகச் செய்திகள்