ஊரடங்கிலும் லாபத்தை ஈட்டிய மஹிந்திரா பைனான்ஸ்.!!

37 Views
Editor: 0

எப்ரல் ஜுன் காலாண்டில் மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனம் ரூ.156 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது..

எப்ரல் ஜுன் காலாண்டில் மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனம் ரூ.156 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

மஹிந்தரா பைனன்ஸ் நிறுவனம் கடந்த ஜுன் காலாண்டில் நிதியுதவி அளிக்கப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.3,489 கோடியாக இருந்தது. இந்த மதிப்பு முந்தையை இதே காலாண்டில் ஒப்பிட்டால் ரூ.10,598.3 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து ரூ.156 கோடியானது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.68 கோடியாக காணப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மஹிந்தரா நிறுவனம் எந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ஜுன் மாதத்தில் மட்டுமே நிறுவனம் நிதியுதவி வழங்கியது.

ஏப்ரல் – ஜுன் காலாண்டில் 40 சதவீத வாடிக்கையாளர்கள் கடன் தள்ளிவைப்பை பயன்படுத்தியுள்ளனர். மேலும் வரும் காலாண்டில் சிறிய ரக வாகனங்கள், வேளாண் உபகரணங்களுக்கான நிதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகச் செய்திகள்