எப்போதெல்லாம் சர்வதேச பங்குச்சந்தை, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகச் சந்தை, போர் பிரச்சனை, வல்லரசு நாடுகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, இயற்கை பேரிடர் ஏற்படும் காலகட்டத்தில் முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் சந்திக்கும். இந்தக் காலகட்டத்தில் முதலீட்டுச் சந்தையைக் காப்பாற்றுவது உலோக சந்தைகள் தான், அதிலும் குறிப்பாகத் தங்கம் மற்றும் வெள்ளி தான் என்றால் மிகையில்லை.
அந்த வகையில் தற்போது கொரோனா, இந்திய - சீனா, அமெரிக்கா -சீனா, அச்சாம் வெள்ளம், சீனா மழை வெள்ளம், ரஷ்யா வரி உயர்வு, எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம்.
வர்த்தகச் சந்தை இயல்பான நிலையில் இல்லாத இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது முதலீடுகளைப் பாதுகாக்க இருக்கும் ஓரே வழி உலோக முதலீடு தான்.
தங்கம் வரலாற்று உச்சம்
2020ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 28 சதவீதம் உயர்ந்து இன்று 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 52,050 ரூபாய் என வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. இதன் மூலம் சாமானியர்கள் தங்கம் மீதான மோகம் சற்று குறையும் என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளி விலை
இதேபோல் வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய வர்த்தகத்தில் 6.6 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை பியூச்சர் சந்தையில் 61,130 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 3 நாட்களில் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 8000 ரூபாய் வரையில் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கும், சமானிய மக்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
சரி வெள்ளியின் தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..??
முதலீடு
அதைத் தாண்டி சர்வதேச முதலீட்டாளர்கள் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவைச் சமாளிக்கத் தங்களது முதலீட்டை அதிகளவில் வெள்ளி மீது செய்யப்படுகிறது. குறிப்பாக மெக்சிகோ, லட்டின் அமெரிக்கப் பகுதியில் வெள்ளி மீது அதிகளவில் முதலீடு செய்யப்படுவதாகத் தெரிகிறது. இதுவும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.