பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
உலகத்தில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை ஆண்டுதோறும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், முகேஷ் அம்பானி 5ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தில் கிடைக்கபெற்ற தொடர்ச்சியான முதலீட்டின் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என போர்ப்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5வது இடத்தை பிடித்துள்ள முகேஷ் அம்பானி, அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி இந்த இடத்தை பிடித்துள்ளார். பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ் தக்க வைத்துள்ளார். இவர் 13 லட்சத்து 80 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.