தடதட ஏற்றத்தில் தங்கம் விலை..மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.

37 Views
Editor: 0

தட தட ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ?.

சாமானியர்களின் அன்புக்கும் ஆசைக்கும் அடையாள சின்னமாக விளங்கும் தங்கத்தின் விலையானது, தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.

ஆனால் இப்படி தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் விலையினை பார்த்தால் அதனை வெறும் கனவில் மட்டுமே பார்க்க முடியும் போல. அந்தளவுக்கு வரலாறு காணாத உச்சம் தொட்டு வருகின்றது.

இது இத்தோடு நின்றுவிட்டால் கூட பரவாயில்லை என்று நிலைக்கு தள்ளிவிட்டது. ஏனெனில் அனுதினமும் தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றது.

நிபுணர்கள் கணிப்புநிபுணர்கள் கணிப்பு

அதோடு இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக நிபுணர்கள் தங்கம் விலையானது தொடர்ந்து உயரும் என்று கணித்து வருகின்றனர். இதற்கேற்றவாறு தங்கம் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவு உச்சம் கண்டு வருகிறது.

வரலாறு காணாத உச்சம்வரலாறு காணாத உச்சம்

கடந்த புதன் கிழமையன்று வர்த்தகத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 50,199 ரூபாயாக அதிகரித்தது. இது கிட்டதட்ட 0.16% ஏற்றமாகும். இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 62,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது 28% ஏற்றம் கண்டுள்ளது. இதே வெள்ளியின் விலையானது புதன் கிழமையன்று 8% ஏற்றம் கண்டுள்ளது. இது கிட்டதட்ட ஏழு வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையில் தள்ளுபடிதங்கம் விலையில் தள்ளுபடி எனினும் சந்தையில் வலுவிழந்த தேவையினால், டீலர்கள் தங்கம் விலையினில் அவுன்ஸூக்கு 5 டாலர்கள் வரையில் தள்ளுபடியினை வழங்கி வருகின்றனர். எனினும் இந்தியா இறக்குமதியாளார்களுக்கு அவ்வளவாக கைகொடுத்ததாக தெரியவில்லை. ஏனெனில் இறக்குமதி வரி 12.5% மற்றும் ஜிஎஸ்டி வரி 3% இதில் சேர்க்கப்படும்போது அந்த தள்ளுபடியானது கைகொடுக்காமல் போகலாம்.

தேவை குறைவுதேவை குறைவு

ஆக தேவை குறைவின் காரணமாக நடப்பு ஆண்டில் தங்கம் இறக்குமதியானது 96% வீழ்ச்சி கண்டுள்ளது. https://tamil.goodreturns.in/news/சர்வதேச சந்தையில் தங்கம் விலைgold-imports-down-94-percent-in-june-quarter-to-688-million-019844.html. இதனை பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளோம். உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அது பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது நான்காவது நாளாக இன்றும் ஏற்றம் கண்டு வருகின்றது. இது அவுன்ஸுக்கு 4.25 டாலர்கள் அதிகரித்து 1,869.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இன்றைய நாளில் இதுவரை உச்சமானது 1,874.25 டாலர்களாகும்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையை விட வெள்ளியின் விலையானது கடந்த சில தினங்களாகவே நல்ல ஏற்றம் கண்டு வருகின்றது. தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் கண்டு வந்த வெள்ளியில் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 0.187 டாலர்கள் குறைந்து, 22.957 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை
எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரையில், கடந்த 5 வர்த்தக தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. புதன் கிழமையன்று தொட்ட புதிய உச்சத்தினை தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் இன்று தற்போது 10 கிராமுக்கு 145 ரூபாய் அதிகரித்து, 50,223 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நிபுணர்கள் சொல்வதனை போல் தொடர்ந்து தங்கம் விலையானது உச்சம் தொடும் நிலையிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலைஎம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது சற்று குறைந்திருந்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்த்கத்தில் சற்று ஏற்றத்துடனேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 155 ரூபாய் அதிகரித்து 62,524 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது தொடர்ச்சியாக ஐந்தாவது நாள் ஏற்றமாகும்.

 

வணிகச் செய்திகள்