நீங்கள் ஒரு வீட்டை விற்று வரும் லாபத்தில் கூட வரி செலுத்த வேண்டும் தெரியுமா? உங்களுக்கு சொந்த வீடு இருந்தால் நீங்கள் வீட்டு வாடகையைக் கணக்கு காட்டி வரிக் கழிவு பெற முடியாது தெரியுமா (கண்டீஷன்ஸ் அப்ளை)?
அட தங்கத்தை விற்று வரும் லாபத்தை கூட வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டி வரி செலுத்த வேண்டும் தெரியுமா? வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் அசல் + வட்டி இரண்டுக்குமே வரிக் கழிவு பெறலாம் தெரியுமா? நம்மில் எத்தனை பேருக்கு, இந்த கேள்விகளுக்கு விடை தெரியும்? இந்த கேள்விகளுக்கான விடையை நாங்கள் சொல்கிறோம். கேள்வி கேட்க நீங்கள் தயாரா?
இந்தியா, ஒரு வளரும் பொருளாதாரம். அடுத்த சில தசாப்தங்களில், உலகின் டாப் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வளர்ச்சியோடு, வளர்ச்சியாக வருமான வரி செலுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வருமான வரி தொடர்பாக தமிழ் குட் ரிட்டன்ஸில் வீடியோக்கள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறோம்.
வருமான வரியில், அடிப்படையான விஷயங்களை பேசிக் கொண்டிருந்த நாங்கள், இனி உங்கள் கேள்விகளுக்கு ஆடிட்டர் மூலமாக விடை கொடுக்க விரும்புகிறோம். எனவே உங்கள் வருமான வரி தொடர்பான சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் எஸ் பாஸ்கரன், உங்கள் கேள்விகளுக்கு விடை கொடுப்பார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக பட்டையக் கணக்காளர் சேவையில் இருக்கிறார். வருமான வரி தொடர்பாக பல விஷயங்களைக் கையாண்டு இருக்கிறார்.