வால்மார்ட் இந்தியாவை அறிவிக்கப்படாத தொகைக்கு வாங்குவதாக பிளிப்கார்ட் இன்று அறிவித்துள்ளது. மேலும் உள்நாட்டு இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இந்தியாவில் 650 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தையை கைப்பற்ற திட்டமிட்டு அடுத்த மாதம் பிளிப்கார்ட் மொத்த விற்பனையை தொடங்கப்போவதாகக் கூறியது.
வால்மார்ட் இந்தியா நாட்டில் 28 சிறந்த விலை மொத்த விற்பனை கடைகளை நடத்தி வருகிறது.
வால்மார்ட் தலைமையிலான முதலீட்டாளர் குழுவிலிருந்து 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டியதாக பிளிப்கார்ட் கூறிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த குழுவில் 77 சதவீத பங்குகளை வாங்குவதற்காக வால்மார்ட் இன்க் 16 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது.
பிளிப்கார்ட் மொத்த விற்பனை என்பது ஒரு புதிய டிஜிட்டல் சந்தையாகும். இது இந்தியாவில் வணிகத்திலிருந்து வணிகத்திற்கு சேவையாற்றுவதை மையமாகக் கொண்டுள்ளது.
“இந்த சந்தை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒரு முனையிலும், கிரானாக்கள் மற்றும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) மறுபுறத்திலும் திறம்பட இணைக்கப் போகிறது” என்று பிளிப்கார்ட் மூத்த துணைத் தலைவரும் பிளிப்கார்ட் மொத்த விற்பனைத் தலைவருமான ஆதர்ஷ் மேனன் கூறினார்.
கிரானா மற்றும் எம்.எஸ்.எம்.இ.க்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறன்களை வலுப்படுத்த இந்த கையகப்படுத்தல் உதவும் என்றார்.
உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான வால்மார்ட், பாரதி எண்டர்பிரைசஸ் உடனான கூட்டு மூலம் இந்தியாவில் நுழைந்தது. இது சிறு வணிகங்கள், கிரானா கடைகள் மற்றும் ஹோட்டல்களை மொத்தமாக வாங்க அனுமதிக்கிறது.
2013’ஆம் ஆண்டில், இரு நிறுவனங்களும் பிரிந்து சென்றன. பிளிப்கார்ட் மொத்த விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும் என்றும் இதற்கு மேனன் தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்மார்ட் இந்தியா வணிகத்தை பிளிப்கார்ட் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் ஊழியர்கள் பிளிப்கார்ட் குழுமத்தில் சேருவார்கள்என்று நிறுவனங்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
வால்மார்ட் இந்தியா வால்மார்ட் இன்க் நிறுவனத்தின் முழு உரிமையாளராக இருந்தது. மேலும் சுமார் 3,500 ஊழியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.