ஜியோவை ஓரம் கட்டிய வொடாபோன் ஐடியா! 

39 Views
Editor: 0

2010 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட டெலிகாம் கம்பெனிகள் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் 3 பெரிய டெலிகாம் கம்பெனிகள் மட்டும் தான் இருக்கிறார்கள்..

2010 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட டெலிகாம் கம்பெனிகள் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் 3 பெரிய டெலிகாம் கம்பெனிகள் மட்டும் தான் இருக்கிறார்கள். ரிலையன்ஸ் ஜியொ, பார்தி ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா. இந்த 3 கம்பெனிகளின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்ற இரண்டு கம்பெனிகளாலும் எளிதில் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள். ஆனால் மற்ற சில விஷயங்களில், ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா போன்ற கம்பெனிகள் ஜியோவை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இணைய வேகம்
இணைய வேகம்

இன்றைய கால கட்டத்தில், இந்தியாவில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தினர்கள் கூட 4ஜி சேவைகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது வந்த பின், வீட்டில் 4ஜி இணைப்புகள் மிகவும் அதிகரித்துவிட்டது. இந்த 4ஜி இணைய வேகத்தை இரண்டாகப் பார்க்கலாம். ஒன்று டவுன்லோட் வேகம். இரண்டாவது அப்லோட் வேகம்.

டவுன்லோடில் கில்லி

டவுன்லோடில் கில்லி கடந்த ஜூன் 2020-ல், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, 4ஜி இணைய வேகத்தில் 16.5 எம் பி பி எஸ் வேகத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வொடாபோன் ஐடியாவின் டவுன்லோட் வேகம் 7.5 எம் பி பி எஸ்-ஆக இருக்கிறதாம். 7.2 எம் பி பி எஸ் வேகத்துடன் 3-வது இடத்தில் தான் ஏர்டெல் இருக்கிறது.

சமீபத்தில் சரிவு
சமீபத்தில் சரிவு கடந்த மார்ச் 2020 & ஏப்ரல் 2020 காலகட்டத்தில், அனைத்து மூன்று டெலிகாம் கம்பெனிகளின் 4ஜி இணைய வேகமும் ஒரு சரிவைக் கண்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த லாக் டவுன் காலகட்டத்தில் ஜியோ 13.3 எம் பி பி எஸ், வொடாபோன் 5.6 எம் பி பி எஸ், ஏர்டெல் 5.1 எம் பி பி எஸ் என டவுன்லோட் வேகத்தில் சரிவைக் காட்டின. அதை எப்படியோ ஜூன் 2020-ல் சரி செய்து இருக்கிறார்கள்.

அப்லோட் வேகம்
அப்லோட் வேகம் அதே ஜூன் 2020 மாதத்தில், யாரும் அதிகம் எதிர்பார்க்காத விதத்தில், வொடாபோன் ஐடியா கம்பெனி, 4ஜி அப்லோட் வேகத்தில் 6.2 எம் பி பி எஸ் வேகத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவும், பார்தி ஏர்டெல் கம்பெனியும் 3.4 எம் பி பி எஸ் அப்லோட் வேகத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்களாம்.

 

வணிகச் செய்திகள்