உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.

35 Views
Editor: 0

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.. எப்படி தெரிந்து கொள்ளலாம்.. சில வழிகள் இதோ..!
இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் பி எஃப் எனப்படும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை ஊழியர்களுக்கு வழங்குகின்றன..

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் பி எஃப் எனப்படும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை ஊழியர்களுக்கு வழங்குகின்றன.

இதன் மூலம் மத்திய அரசு உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் ஊழியர்கள் பணியை விட்டு செல்லும் போது அந்த தொகையினை எடுத்து கொள்ளலாம்.

இதனை தொழிலாளர்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பிஎஃப் தேவைப்படாத பட்சத்தில் ஓய்வுக்கு பின்பும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிலருக்கு அதில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதும் தெரிவதில்லை. சிலருக்கு யுஏஎன் என்றாலும் தெரிவதில்லை. முதலில் யுஏஎன் எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

 

எந்த தளத்தில் எப்படி பெறுவது?

எந்த தளத்தில் எப்படி பெறுவது?

நாம் இன்று பார்க்கவிருப்பது யுஏஎன் நம்பரை எப்படி பதிவு செய்வது? அதன் மூலம் எப்படி தொகையினை பெறுவது? என்பதை பார்க்க போகிறோம். தொழிலாளர்கள் யுனிஃபைடு மெம்பர் போர்டல் வலைதளம் மூலம் தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை பெற எப்படி விண்ணப்பிக்க முடியும் என்பதையும் பார்க்கலாம்.

யுஏஎன் நம்பர் இருக்கிறதா?யுஏஎன் நம்பர் இருக்கிறதா?

ஆன்லைனில் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிப்பது மிகவும் எளிய முறையாகும். ஆக தொழிலாளர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஃபார்ம் 19, பார்ம் 10சி மற்றும் ஃபார்ம் 31 போன்றவற்றை ஒருங்கிணைத்து இருக்கிறது. இவ்வாறு செய்யும் முன் உங்களிடம் ஆக்டிவேட் செய்யப்பட்ட யுஏஎன். நம்பர் மற்றும் EPFO வலைதளத்தில் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

யுஏஎன் நம்பரை ஆக்டிவேட் செய்யுங்கள்

யுஏஎன் நம்பரை ஆக்டிவேட் செய்யுங்கள்

ஏனெனில் உங்களது யுஏஎன் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். ஒருவேளை உங்களிடம் யு.ஏ.என். நம்பர் உங்களிடம் இல்லாத பட்சத்தில் ஆக்டிவேட் யுஏஎன் எனும் பட்டனை கிளிக் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின்பு உங்களது யுஏஎன் நம்பர் ஆக்டிவேட் ஆக 24 மணி நேரங்கள் ஆகும்.

எப்படி விண்ணப்பிப்பது?

 

எப்படி விண்ணப்பிப்பது?

ஆக்டிவேட் செய்த பின்பு லாக் இன் செய்யும் பட்சத்தில் பயனர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அதில் ஆன்லைன் சர்வீசஸ் ஆப்சனை கிளிக் செய்து மெனு பாரில் இருக்கும் க்ளைம் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு இனி வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவு செய்து, வெரிபை பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

உறுதி செய்ய வேண்டும்

உறுதி செய்ய வேண்டும்

வெரிஃபை ஆனதும், கீழ்புறம் சென்று Proceed to Online Claim ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்த பக்கத்திற்கு சென்று பட்டியலில் இருந்து Only PF withdrawal form ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் ஒடிபி மூலம் உங்களது விண்ணப்பத்தினை உறுதி செய்ய வேண்டும்.

எப்படி தெரிந்து கொள்வது?எப்படி தெரிந்து கொள்வது?

பெருமளவிலான தொழிலாளர்கள் தற்போது இந்த யுஏஎன் நம்பரை பெற்று இருந்தாலும், உங்கள் கணக்கிலுள்ள இருப்பை எப்படி தெரிந்துக்கொள்வது. நீங்கள் உங்களது வருங்கால வைப்பு நிதியினை உமாங் ஆப் (Umang App) மூலமும் தெரிந்து கொள்ளலாம். EPFOவின் உறுப்பினர் சேவா போர்டல் மூலமும், எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.

Umang app ஆப் மூலம் எப்படி தெரிந்து கொள்வது?Umang app ஆப் மூலம் எப்படி தெரிந்து கொள்வது?

தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை மொபைல் மூலமாக பார்த்துக் கொள்ள, Umang app ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட ஒரு ஆப் தான் உமாங் ஆப். ஒருவர் இந்த ஆஃப் மூலம் EPF பாஸ் புத்தகத்தினையும் பெற முடியும். இதன் மூலம் உங்களது இருப்பினை தெரிந்து கொள்ளலாம். உங்களது கணக்கிலிருந்து க்ளைம் செய்ய உரிமை கோரலாம். க்ளைம் செய்ததை டிராக் செய்யலாம். உங்களது மொபைல் எண்ணினை பயன்படுத்திக் கொண்டு இந்த பதிவினை செய்து கொள்ள முடியும்.

EPFO portal பயன்படுத்தி எவ்வாறு தெரிந்து கொள்வது?EPFO portal பயன்படுத்தி எவ்வாறு தெரிந்து கொள்வது?

Unified portal போர்டலுக்கு பதிலாக, இப்போது தொழிலாளர்கள் மற்றொரு இணையதளத்திலும் அணுக முடியும். தொழிலாளர்களின் பாஸ்புத்தகம் www.epfindia.gov.in என்ற இணையத்திலும் இருக்கும். இந்த இணையதளத்தில் our services என்ற லிங்கினை கிளிக் செய்து, பின்பு, for employees என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து member passbook என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது யுஏஎன் நம்பரை பதிவு செய்து, பாஸ்வேர்டையும் கொடுத்து லாகி இன் செய்து கொள்ள முடியும். பின்பு உங்களது அனைத்து விவரங்களையும் பெற முடியும்.

எஸ்எம்எஸ் மூலம் பேலன்ஸ்

எஸ்எம்எஸ் மூலம் பேலன்ஸ்

உங்களது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணிக்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும்.

இதனை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்இதனை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்

இந்த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகள் உள்ளது.

EPFO அதன் பதிவுகளில் கிடைக்கும் உறுப்பினர்களின் விவரங்களையும் அனுப்புகிறது. உங்கள் UAN எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலமும் உங்களது இருப்பினை தெரிந்து கொள்ள முடியும்.

மிஸ்டு கால் மூலமும் தெரிந்து கொள்ளலாம்

மிஸ்டு கால் மூலமும் தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் யுஏஎன் நம்பரினை பதிவு செய்திருந்தால், 011-22901406 என்ற எண்ணிக்கு, உங்களது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் UAN எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இந்த சேவையினை பெறுவதற்கு எந்த செலவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகச் செய்திகள்