“HOME SERVICE“:வீட்டிற்கே வரும் டி.வி.எஸ் மோட்டார்ஸ்.!!
வாடிக்கையாளர் இல்லங்களுக்கே சென்று வாகன பராமரிப்பு சேவையை வழங்கும் புதிய திட்டத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
எக்ஸ்பர்ட் ஆன் வீல்ஸ் என்னும் புதிய சேவையான வாடிக்கையாளர் வீட்டிற்கு சென்று வாகன பராமரிப்பு சேவையை வழங்கும் புதிய திட்டத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திட்டம அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் நன்மையை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிமுகம் செய்மதுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 300 விநியோக மையங்களை கொண்டுள்ளது. அந்த மையத்தில் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றி இந்த சேவையை வழங்கும் என அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.