முகேஷ் அம்பானி நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்..! உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து ஏறுமுகம்..!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி இப்போது உலகின் நான்காவது பணக்காரராக உயர்ந்துள்ளார். அம்பானிக்கு முன்னால் தற்போது அமேசானின் ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட்டின் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் மட்டுமே உள்ளனர்.
உலகின் பணக்காரர்களின் தரவரிசைகளைக் காட்டும் பட்டியலின் படி, பெர்னார்ட் அர்னால்ட், வாரன் பபெட், ஸ்டீவ் பால்மர், லாரி பேஜ், செர்ஜி பிரின், எலோன் மஸ்க் மற்றும் பலரை விட அம்பானி தற்போது செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020’ம் ஆண்டின் தொடக்கத்தில் அம்பானி 14’வது இடத்தில் இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் அவரது நிறுவனத்தின் பங்குகள் 145%’க்கும் மேலாக உயர்ந்ததை அடுத்து பட்டியலில் மளமளவென முன்னேறி வருகிறார்.
முதல் 5 பில்லியனர்களில் அம்பானி இடம் பெறுவது பல காரணங்களுக்காக குறிப்பிடத்தக்கதாகும். பல தசாப்தங்களாக, உலகின் முதல் ஐந்து பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்கர்கள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஆசியாவிலிருந்து ஒரு நபராக இணைந்துள்ளது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
உலகில் முதல் 10 பணக்காரர்கள் :
பெயர் | சொத்து மதிப்பு (அமெரிக்க டாலரில்) |
ஜெஃப் பெசோஸ் | 187 பில்லியன் |
பில் கேட்ஸ் | 121 பில்லியன் |
மார்க் ஜுக்கர்பெர்க் | 102 பில்லியன் |
முகேஷ் அம்பானி | 80.6 பில்லியன் |
பெர்னார்ட் அர்னால்ட் | 80.2 பில்லியன் |
வாரன் பஃபெட் | 79.2 பில்லியன் |
ஸ்டீவ் பால்மர் | 76.4 பில்லியன் |
லாரி பேஜ் | 71.3 பில்லியன் |
செர்ஜி பிரின் | 69.1 பில்லியன் |
எலோன் மஸ்க் | 68.7 பில்லியன் |
இந்த பட்டியலைத் தொடர்ந்து பிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ், லாரி எலிசன், மெக்கென்சி ஸ்காட், ராப் வால்டன், ஜிம் வால்டன், ஆலிஸ் வால்டன், அமன்சியோ ஒர்டேகா, சார்லஸ் கோச், ஜூலியா ஃப்ளெஷர் கோச், போனி மா, ஜாக் மா, கார்லோஸ் ஸ்லிம், ஜாக்குலின் மார்ஸ், ஜான் மார்ஸ், டான் கில்பர்ட் ஆகியோர் உள்ளனர்.