ஏறுமுகமாக இருந்த ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு – நடுத்தர மக்கள் மகிழ்ச்சி

29 Views
Editor: 0

இந்தியாவில் ஆபரண தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் மக்களிடத்தில் குறையவில்லை என்பதால், அதன் விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்தது..

ஏறுமுகமாக இருந்த ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு – நடுத்தர மக்கள் மகிழ்ச்சி:

 

இந்தியாவில் ஆபரண தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் மக்களிடத்தில் குறையவில்லை என்பதால், அதன் விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்தது.  இந்தநிலையில் சென்னை ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்து, ரூ.40,104 விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.229 குறைந்து ரூ.5,013 விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல்,  வெள்ளியின் விலை ரூ.82.80 காசுகளுக்கும், கிலோ ரூ.82,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சரிந்துள்ளதால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளில் குறைவான வட்டி விகிதம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கி உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிகச் செய்திகள்